நீ திருந்தி வாழ், பிறரைத் திருத்த முயற்சிக்காதே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

ஆனந்தத்தை அள்ளிப் பருகுவதற்கு முன்னர்... ஓர் அறிமுகம் !

இப்பூவுலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையே. ஆனால் அவை உலக சுக, போகங்களில் சிக்கி, தாங்கள் இறைவனின் ஒரு பகுதியே என்ற உண்மையை மறந்து வாழ்கின்றன. இதைத்தான் மாயை என்கின்றோம். மாயையில் மயங்கிக் கிடக்கும் உயிர்களை உய்விக்க இறைவன் தானே வெவ்வேறு அவதாரங்களை எடுத்து, பல்வேறு திருவிளையாடல்களைப் புரிந்து, உயிர்களின் உண்மை நிலையை உணர்த்தித் தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொள்கின்றார்.இவ்வாறான இறை அவதாரங்களில் முதன்மையான இடத்தை வகிக்கின்றார் ஸ்ரீஅகஸ்திய மஹா பிரபு. பரமேஸ்வரரின் ஆணைப்படி பூலோகத்திலும், மற்ற லோகங்களிலும் யுகங்கள் தோறும் தோன்றி, உயிர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக சதா சர்வ காலமும் அற்புத இறைப் பணி ஆற்றி வருகின்றார்.

கர்பப்பை புற்றுநோய், கர்ப்பம் நழுவுதல் போன்ற கோளாறுகளால் வருந்தும் பெண்களுக்கு உதவும் ஓர் உத்தம வழிபாடு இதோ. திருச்சி மலைக்கோட்டை திருக்கோயில் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கொழுக்கட்டையை வைத்து வணங்கி மலை ஏறிச் செல்லவும். மடியில் அரிசி சாதத்தை கட்டிக் கொள்ளவும். உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்தவுடன் அங்கிருந்தே ஸ்ரீரெங்கநாதரையும் தரிசனம் செய்யவும். பின் மடியில் உள்ள சாதத்தை மலை மேல் உள்ள காக்கை, குருவி போன்ற பறவைகளுக்கு தானமாக அளித்து விடவும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நோய்கள், அடி வயிற்றில் உருவாகும் கட்டி போன்ற பலவிதமான நோய்களுக்கும் நிவர்த்தி தருவதே மேற்கண்ட முறையில் அமையும் உச்சிப் பிள்ளையார் வழிபாடாகும். சதுர்த்தி, சதுர்த்தசி, மூல நட்சத்திர நாட்களில் இத்தகைய வழிபாட்டை இயற்றுவது சிறப்பு.

எம்பெருமானாகிய அகஸ்திய முனிவர் கலியுக மக்களின் சீர்கேடுகளை நீக்க, இந்த யுக நியதிப்படி ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர் என்ற காரணப் பெயரோடு (இது தொடர்பான விளக்கத்தைப் பின்னால் அளித்துள்ளோம்.) சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பூலோகத்தில் தோன்றினார். தன்னலம் கருதாமல் உலக மக்களின் சேவைக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் இறை அடியார்களின் சத்சங்கம் ஒன்றை ஏற்படுத்த எண்ணினார் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர். அவரது திருக் கடாட்சம் வெங்கடராமன் என்ற ஆறு வயது பாலகன் மேல் விழுந்தது. உலகத்தோரின் கண்களுக்குத்தான் சிறுவன். ஆனால் உண்மையில் இறை உணர்வு பூரணமாக நிரம்பப் பெற்ற ஆத்ம ஜோதியே வெங்கடராமன்! எனவே ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர் வெங்கடராமனைத் தன் முதன்மை சீடராக ஏற்றுக் கொண்டார்.

1955ம் ஆண்டு சென்னை இராயபுரம் கல் மண்டபத்தில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் வெங்கடராமனை ஆட்கொண்ட ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு அதி அற்புத ஆன்மீகப் பயிற்சிகளை வெங்கடராமனுக்கு அருளினார். அதுவும் எப்படி? தானே அருகிலிருந்து! ‘தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது’ என்பது அவர் திருவாய்மொழி. ஆன்மீக ரகசியங்கள் ஒவ்வொன்றையும் பல்வேறு அனுபவங்கள் மூலமாகவே வெங்கடராமனுக்கு அளித்து வந்தார். பயிற்சியின் முடிவில் சிறுவன் வெங்கடராமன் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமையாக, திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரையின் 1001-வது குருமஹா சன்னிதானமாக, குரு மங்கள கந்தர்வா என்ற சித்த பீட பட்டத்துடன் ஆன்மீக இமயமாக உயர்ந்து நின்றார். ‘தன் அருமைச் சீடன் இனி ஆன்மீக வேட்கை கொண்ட உத்தம இறை அடியார்களுக்கு ஒர கலங்கரை விளக்கமாகத் திகழ்வான்’ என்பதை உணர்ந்த ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர் தனது பின்னர் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் தனது குருவின் ஆணைப்படி கோயில் திருப்பணி, அன்ன தானம், இலவச மருத்துவ முகாம்-, ஆன்மீகப் பிரசுரங்கள் வெளியீடு போன்ற அரும்பெரும் பணிகளை ஜாதி, மத, இன, குல பேதமின்றி சுமார் 40 ஆண்டுகளாக தனது சீடர்களின் மூலம் ஆற்றி வருகின்றார்கள்.

1993 முதல் திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் என்ற ஆன்மீக மையத்தையும் அமைத்து, அதன் மூலம் ஒவ்வொரு மாதாந்திரப் பௌர்ணமி நாளன்றும், திருக்கார்த்திகை தீபப் பெருவிழா நாட்களிலும் கிரிவலம் வரும் அடியார்களுக்கு மிகப் பெரிய அளவில் அன்ன தானமும், ‘ஸ்ரீஅகஸ்திய விஜயம்’ என்ற மாத ஆன்மீக இதழ் மற்றும் பல்வேறு ஆன்மீகப் பிரசுரங்கள் வெளியிடும் இறைப்பணியும் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். பல இறை அடியார்களின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் தமது குருகுல வாச அனுபவங்களை ‘அடிமை கண்ட ஆனந்தம்’ என்ற தலைப்பில் அவ்வப்போது அருளியுள்ளார்கள். ஓன்பது வருடங்கள் தமது குருவின் அரவணைப்பில் தான் பெற்ற இன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க லாது என்றாலும், தான் பெற்ற ஆனந்தத்தை நாம் அனைவரும் ஓரளவாவது அறிந்து பயன்பெற வேண்டி, அவர் அளித்துள்ளவற்றை சிறு சிறு தொடர்களாக இங்கு தொடர்ந்து அளிக்க எண்ணியுள்ளோம். ஓரு துளி என்றாலும், அமிர்தமானது என்றென்றும் சாகாவரம் தர வல்லதுதானே! ஆன்மீக ஈடுபாடு கொண்ட இறை அடியார்கள் அனைவரும் இந்த தெய்வீக பொக்கிஷங்களைப் படித்து, உணர்ந்து, அனைத்து நலன்களையும் பெற்று நல்வாழ்வு வாழ திருஅண்ணாமலையாரின் அருள் வேண்டிப் பணிகின்றோம்.

ஓம் குருவே சரணம்

உன்னை முதன் முதலாகப் பார்த்த போது ...

விழுந்தான் சிறுவன்! சிரித்தார் பெரியவர் !!

ஏன் ? எதற்கு ? வாருங்கள், தெரிந்து கொள்வோம் !

1955ம் ஆண்டு ! கோடை விடுமுறை முடிந்து பள்ளியும் திறந்தாகி விட்டது. மாலை நேரம். அந்தச் சிறுவன் பையை ஸ்டைலாகச் சுழற்றியபடியே பள்ளியிலிருந்து தலைதெறிக்க ஓடி வந்தான். ஏன்? பள்ளிக்கூடம் விட்டாச்சு என்று ஒரே சந்தோஷம்தான். சர்ரென்று ஏதோ தடுக்கி விட... சிறுவன் பல்டி அடித்துக் கொண்டு விழுந்தான். மெதுவாக எழுந்து பார்த்தான். டிராயர் கிழிந்து விட்டது. ‘சரி. வீட்டுக்குப் போனால் அப்பாவிடம் செம்மையாக உதை வாங்க வேண்டியதுதான்’. குனிந்து காலைப் பார்த்தால்... ‘அடேடே. முட்டியில் ரத்தம்’ தோல் சிராய்ப்புகள் வேறு. அதில் தெரு மண் பட்டு திகுதிகு என்று எரிச்சல். சிறுவனுக்கோ உச்சி முதல் உள்ளங்கால் வரை வலி வேறு. மெதுவாக முனகியபடியே சுற்றிலும் சிதறிக் கிடந்த தனது சிலேட்டு, நோட்டுப் புத்தகங்களை அள்ளி எடுத்துக்கொண்டு நிமிர்ந்த சிறுவனின் காதுகளில் யாரோ சிரிப்பது கேட்டது.

“ஹா, ஹா, ஹா” எதிரே ஒரு வயதான பெரியவர் சிறுவனைப் பார்த்தபடி பெரிதாகச் சிரித்துக் கொண்டிருந்தார். ‘நம்மைப் பார்த்துதானா சிரிக்கின்றார்?’ சிறுவன் சுற்றுமுற்றும் பார்த்தான். சிறுவன் பார்ப்பது தெரிந்ததும் இப்போது பெரியவர் நன்றாகக் கைகளைத் தட்டியபடியே சிரித்தார். போதாக்குறைக்கு “விழுந்தாயா, நல்லா வேணும்” பெரியவரின் சிரிப்பு பலமாகியது. சிறுவனுக்குக் கோபம் வந்து விட்டது. முட்டி எரிச்சலோடு நொண்டியபடியே பெரியவரிடம் சென்றான். எரிச்சலான பார்வையோடு அவரை நன்றாக உற்றுப் பார்த்தான். முன் வழுக்கைத் தலை. லேசான தாடி. பளபளக்கும் கண்கள். நீண்ட கைகள், கால்களோடு கூடிய கோவணம் கட்டிய உருவம். எழுந்து நின்றால் நல்ல உயரமாக இருப்பார் போல இருந்தது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பொதுவாக மன சஞ்சலங்கள் மிகுதியாக இருக்கும். இத்தகையோர் வியாழக் கிழமை தோறும் பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு பாசுரங்களை 21 முறைக்குக் குறையாமல் ஓதி பிஸ்தா பருப்பு கலந்த பசும்பால் தானமாக அளித்து வந்தால் அவசரமாக எடுத்த முடிவுகளால் விளையும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெற வழி பிறக்கும்.

“ஓம். வா ராஜா.” என அழைத்தார் பெரியவர். அன்பு ததும்பி நிற்கும் சொற்கள்! இதுவரை தன் தாயின் அன்பினை மட்டுமே அனுபவித்த சிறுவன் அன்றுதான் தாயன்பினையும் கடந்து நின்ற அன்பு கலந்த “வா, ராஜா” என்ற வார்த்தைகளில் மயங்கி நின்றான். யார் இவர்? சற்று நேரம் அங்கே மௌனம் நிலவியது. சிறுவன் இப்போது தன்னைச் சுதாரித்துக் கொண்டான். ‘ இந்த ஆளு நம்மைப் பார்த்து சிரிச்சாருல்ல. நல்லா ஒரு வாங்கு வாங்குவோம்னுதான வந்தோம். ஏமாந்துட்டனோ. சேச்சே. இவரை சும்மா விடக்கூடாது’ என நினைத்தவுடன் சிறுவன் தனக்குள் கஷ்டப்பட்டு கோபத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டான். “ஏன் பெரியவரே. நான் விழுந்ததைப் பாத்து சிரிச்சியே. உனக்கே இது நல்லா இருக்கா?”

செய்நன்றி கொன்றவர்களுக்கு எக்காலத்திலும் விமோசனம் கிடையாது என்று பெரியவர்கள் கூறகின்றனர். ஆனால், சித்தர்களின் தாயுள்ளம் அன்னவர்களுக்கும் வழிகாட்ட கருணை கொண்டிருப்பதால் செய்நன்றி மறத்தல் என்னும் கடுமையான குற்றங்களுக்கு ஆட்பட்டோர் கூட மனம் திருந்தி உண்மையிலேயே தங்கள் தவறுக்காக பிராய சித்தம் பெற விரும்பினால் அவர்களுக்கு அருள்புரிய சிரித்த முகத்துடன் வீற்றிருப்பவரே திருச்சி உறையூர் நாச்சியார்கோயில் தூணில் அருள்புரியும் அகத்திய பெருமான் ஆவார். ஸ்ரீராமருடன் அருட்காட்சி தரும் அகத்திய முனியை வணங்கி தூய பசு நெய் காப்பிட்டு குழந்தைகளுக்குத் தேங்காய் மிட்டாய் தானமாக அளித்து வந்தால் செய்நன்றி மறந்த குற்றங்களுக்குப் பரிகார முறைகள் தக்கோர் மூலம் உணர்த்தப் பெறும். செய்நன்றி மறவாத குணம் செறிந்ததே தென்னை மரமாகும்.

சிறுவனின் பேச்சைக் கேட்ட பெரியவரோ முன்னைவிட இன்னும் பலமாகச் சிரித்தார். அதைக் கேட்டதும் சிறுவனுக்கு உண்மையிலேயே கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “என்னா பெரியவரே. இது என்ன சிரிக்கற வயசா. சின்னப் பையன் விழுந்தப்ப வந்து தூக்கி விடாட்டியும் பரவாயில்ல.நானே முட்டி எல்லாம் தேய்ஞ்சு போயி கஷ்டப் படறேன். என்னைப் பாத்து இந்த சிரிப்பு சிரிச்சா என்ன அர்த்தம்?” “ஓம். ஓம். ஓம். அடேடே. முட்டிலே அடி பட்டிருச்சா ராஜா?” என்று அன்போடு கேட்டவாறே பெரியவர் சிறுவனின் முழங்காலைப் பிடித்தார். பத்தாயிரம் வோல்ட் கரண்ட் ஷாக் அடித்தது போல இருந்து சிறுவனுக்கு. காலை விடுவிக்க
அவனுக்குத் தோன்றவில்லை. அது மட்டுமா? அவன் கோபமும் போன இடமே தெரியவில்லை. ‘என்னாச்சு எனக்கு?’ சிறுவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

முட்டியைப் பிடித்த பெரியவர், “அடடா. என்னமா ரத்தம் வழியுது?” என்றவாறே சிறுவனை உற்று நோக்கினார். அவரது சக்தி வாய்ந்த கண்களை எதிர்நோக்க சக்தியில்லாமல் தனது பார்வையை மாற்றித் தன் முழங்காலைப் பார்த்தான் சிறுவன். “பெரியவரே, என்னா செய்யப் போற.” தன்னையும் அறியாமல் தனது வார்த்தைகளில் சற்று மரியாதை கலப்பதை உணர்ந்து திடுக்கிட்டான் சிறுவன். ‘ மனதில் கோபம் இருந்தாலும் நான் ஏன் இப்படிப் பேசுகிறேன்?’ இதுதான் அச்சிறுவனின் வாழ்க்கையிலேயே முதல் ஆத்ம விசார வினா! இப்போது பெரியவர் மெதுவாக சிறுவனின் முட்டியில் தனது உள்ளங்கையை வைத்தார். ‘ஆஹா. நல்லா எரியப் போகுதே’ என நினைத்த சிறுவன் அதைச் சொல்வதற்கு முன்பாகவே பெரியவர் தன் கையை எடுத்து விட்டார்.

ஸ்ரீஅகத்தியர் ஸ்ரீராமபிரான்
நாச்சியார்கோவில் திருச்சி

கால் எரிச்சலை எதிர்பார்த்துத் தன் கண்களை இறுக மூடிக் கொண்ட சிறுவன், பெரியவர் தனது கைகளை எடுத்ததும் கண்களைத் திறந்து சற்றே குனிந்து பார்த்தான். “ஹையா. கால்ல இருந்த காயம் போயிடுச்சே. இரத்தம் கூட காணலயே” சிறுவன் வானுக்கும், பூமிக்கும் குதித்தான். ஆம். சற்று முன் அவன் கீழே விழுந்து முட்டிக்காலில் அடிபட்ட சுவடே தெரியவில்லை. இதெல்லாம் சிறுவன் கண்மூடி கண் திறப்பதற்குள் நடந்து விட்டது. இப்போது பெரியவர் சிறுவனைத் தன் பக்கமாய் இழுத்து, அவன் உடல் முழுவதும் தன் திருக்கரங்களால் நீவி விட, சிராய்ப்புக் காயங்கள் அனைத்தும் மறைந்தன.

பயத்தால் சிறுவன் வெடுக்கென அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். ‘யாரு இவரு? நானு தினமும் இந்தப் பக்கந்தான ஸ்கூலுக்குப் போறது. ஓருநாளு கூட இவரப் பாத்ததே கிடையாதே. எங்க இருக்காரு?’ சிறுவன் தனக்குத்தானே ஏதேதோ பேசிக் கொள்வதைப் பார்த்த பெரியவர் படபடவெனப் பேசலானார். “இதப் பாரு ராஜா. அதோ அங்க இருக்கே, அங்காளம்மா கோயிலு. அங்கதான் நானு எப்பவும் குந்திகினு இருப்பேன். உனக்கு இஷ்டமிருந்தா என்னை வந்து நீ அங்க பாக்கலாம்.”

“அங்காளம்மாவா? அது யாரு பெரியவரே, ரொம்ப பெரிய சாமியா?” தொடங்கி விட்டது சிறுவனின் குருகுலவாசம்.

பெரியவரிடம் சிறுவன் கேட்ட முதல் கேள்வியே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியைப் பற்றித்தான்! “அங்காளியையா யாருன்னு கேக்கற. இப்ப உன்னோட முட்டிக் காயத்த சரி பண்ணினா பாரு. அவதான் அங்காளி.” பெரியவரின் பதிலைக் கேட்ட சிறுவன் தன்னை மறந்து நின்றான்.

“அப்ப நீ யாரு?” எனக் கேட்க நினைத்தான். அவன் கேட்பதற்கு முன் பெரியவரே பதில் கொடுத்தார். “நானா, அடியேன் அந்த அங்காளம்மாவோட அடிமை. அங்காளி அடிமைன்னு வச்சுக்கயேன்.” சிறுவனுக்கு இப்போது சந்தோஷம் பிறந்து விட்டது. அவனையும் மதித்து அவனுடைய அசட்டுக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க ஓர் ஆத்மா கிடைத்து விட்டதைக் குறித்து ரொம்பவே குஷியாகி, தனது கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டான்.

இவ்வாறாகவே 1955ம் ஆண்டில், கோடை காலத்தில் ஒரு நாளில், நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளால் முதன்முதலாக அரவணைக்கப்பட்டு ஆட்கொள்ளப்பட்டார். இதுவே நம் கோவணாண்டிப் பெரியவர் - அரை டிராயர் சிறுவனின் முதல் சந்திப்பு !

ஓம் குருவே சரணம்

தொடரும் ஆனந்தம்...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam