ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்
எல்லையில்லாப் பரம்பொருள் தன்னுடைய தெய்வீக சக்தியை திருஅண்ணாமலை ஓளிப் பிழம்பாகவும், பஞ்ச பூத தலங்களில் லிங்க மூர்த்தி வடிவுகளிலும் வெளிப்படுத்தி உள்ளது.
அனைவரும் மிகவும் எளிமையாக தன்னை வழிபடும் வகையில் ந ம சி வா ய என்னும் பஞ்சாட்சர வடிவிலும் எழுந்தருளி உள்ளான் ஈசன்.
அதுபோல கனகசபை, சித்ர சபை, சிற்சபை, தேவ சபை, நிருத்த சபை என்னும் ஐந்து சபைகளில் நடராஜ நாட்டியங்களாகவும் திருக் காட்சி தந்தருளி உள்ளார் எம்பெருமான். ஆனால், இந்த ஆனந்த தாண்டவ நாட்டிய இரகசியங்களை சாதாரண மனிதர்களால் உணர முடியாது என்பதால் இந்த நாட்டியங்களை தரிசிக்கும் பேறு பெற்ற பதஞ்சலி, காரைக்கால் அம்மையார், வியாக்த பாதர், அகத்தியர் போன்ற முனிவர்களும் ரிஷிகளும் எம்பெருமானின் நாட்டியக் கோல இரகசியங்களின் தெய்வீக சக்திகளை சாதாரண மக்களும் பெறும் பொருட்டு நடராஜ மூர்த்தங்கள், திருக்கோயில் கோபுரங்கள், தீர்த்தங்கள், கொடிமரங்கள் இவற்றில் பதித்து வைத்துள்ளார்கள்.
பதஞ்சலி முனிவர் பெற்ற ஆனந்த தாண்டவ ரகசியத்தை சிதம்பரம் கோயில் மேற்கூரையில் தங்க கூரையில் வில்வத் தலங்களாக பதித்து வைத்திருப்பது போல் அகத்திய பெருமான் திருக்குற்றால சித்திர சபையில் தான் பெற்ற ஆனந்த தாண்டவ இரகசியங்களை சித்திரங்களாக பதித்து வைத்துள்ளார்.
27 நட்சத்திரங்களில் நடு நாயகமாக விளங்கும் சித்திரை நட்சத்திரம் திரிதினமாக விளங்கிய சக்தி மிகுந்த நாளில் பிரதோஷம் இணைந்த புண்ணிய காலத்தில் அகத்திய பெருமான் எம்பெருமானின் மந்தார மன்மத ஆனந்த தாண்டவம் என்னும் நடராஜ கூத்தை காணும் பேறு பெற்றார்.
பொதுவாக நடராஜ பெருமானின் அனுகிரக சக்தியை தாண்டவம், நாட்டியம் என்றும் அழைத்தாலும் இறைவன் ஒவ்வொரு யுகத்திலும் எத்த்னையோ கோடி நாட்டியங்களை நிகழ்த்தி உள்ளான். அத்தனை கோடி தாண்டவ கோலங்களும சிறப்பான பெயர்களை பெற்று விளங்குகின்றன.
அவ்வாறு அகத்திய பெருமான் சித்ர சபையில் பெற்ற தாண்டவமே மந்தார மன்மத தாண்டவம் என்று சித்தர்களால் புகழப்படுகிறது. அறிவு, ஆற்றல், அழகு அனைத்தையும் அனுகிரக சக்திகளாக அளிக்க்க்கூடியதே இந்த்த் தாண்டவம். இந்த அற்புத சக்திகளை உலக மக்களின் நன்மைக்காக அகத்திய வழித் தோன்றலான ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தனது குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈசன் அருளால் பெற்று உலக மக்களின் நன்மைக்காக அதை அர்ப்பணித்தார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் திருக்குற்றாலத்த்திற்கு தனது அடியார்களுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் சித்திரை திரிதினமாக அமைந்த புனித நாளில் பிரதோஷ சுப முகூர்த்த வேளையில் சித்திர சபையை தரிசனம் செய்து மந்தார மன்மத தாண்டவ அருட் சக்திகளை உலக மக்களின் மேன்மைக்காக தாரை வார்த்து அளித்தார்கள். அந்த புனித நேரத்தில் திகழ்ந்த திருக்குற்றால சித்ர சபை தரிசனமே நமது அமுத தாரைகள் (பாகம் ஏழு) என்னும் நுலை அலங்கரிக்கின்றது என்பது இதுவரை நீங்கள் அறியாத ஆன்மீக இரகசியம்.
இவ்வாறு ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளிய மந்தார மன்மத ஆனந்த தாண்டவ இரகசியங்களே சித்திர படங்களாக தற்போது தரிசிக்கிறீர்கள். அவை வெறும் சித்திரங்கள் அல்ல. எம்பெருமான் சிவபெருமானின் மந்தார மன்மத ஆன்ந்த தாண்டவ அருட் கோலங்கள். இடியாப்ப சித்த ஈசபெருமானின் கருணை கடாட்ச முத்துக்கள். அகத்திய பெருமானின் அமுதத் துளிகள். வெங்கடராம ஈசனின் அருட்கொடை.
பக்தருக்குக் கோபம் வந்தால் சிவலிங்கத்தை உடைத்து விடுவாரா என்ற சந்தேகம் இக்கதையைப் படித்தவுடன் ஏற்படலாம்.
உண்மையில் தன்னுடைய தெய்வீகத்தை உலகம் புரிந்து கொள்ளாதபோது இறை தூதர்கள் மறைந்து விடுவது உண்டு. அது போலவே அந்த அடியாரும் தன்னுடைய தபோ சக்திகளை சிவலிங்கத்திடம் அர்ப்பணித்து விட்டு தன்னுடைய பூத உடலை மறைத்துக் கொண்டார். அடியாரின் தவ சக்தியே
லிங்கத்திலிருந்து வெளிவந்து லிங்கம் பிளவு பட்டது போன்ற தோற்றத்தைத் தந்தது.
அவ்வாறு வெளிவரும் சக்திக்கு காசீபிலம் என்று பெயர்.
அது ஆங்கில “V” எழுத்து வடிவில் இருக்கும். இத்தகைய காசீபில சக்தியை தன்னுடைய முதல் எழுத்தாக கொண்டு அவதரித்த வெங்கடராம சுவாமிகள் தன்னை திருஅண்ணாமலை பெருஞ்சோதியில் ஐக்கியப்படுத்திக் கொண்டபோது அந்த தெய்வீக சக்தியை உலகிற்கு அர்ப்பணித்தார்கள். அதுவே அண்ணமாலையானுக்கு அரோஹரா என்ற ஜீவ ஒலியாக இன்றும் ரீங்காரமிட்ட வண்ணம் உள்ளது.
ஓம் குருவே சரணம்
திரிதின சித்திரை நட்சத்திரமும் பிரதோஷமும் இணைந்த |